உன்னிடம் பேசும் போது...!
உன்னிடம் பேசும் போது
என்னிடம் சந்தோசம்
என்னிடம் பேசும் போது
உன்னிடம் வெட்கம்!
எட்ட நின்று பார்க்கும் போது
மனசுக்குள் உதறல் எடுக்கும்
கிட்ட வந்து பேசும் போது
இதயம் வெளிவந்தது போல் துடிக்கும்
விழியாலே பார்வை வீச
விழுந்த இடம் மறந்து போனேன்
விரலாலே உரசிப் பேச
வாலிபத்தை இழந்து போனேன்...
பார்க்காத நாட்கள் எல்லாம்
பேசிக்கொண்டே இருக்கத் தோன்றும்
பேசாத நாட்கள் என்றால்
நாட்காட்டி எரிக்கத் தோன்றும்
வெட்கம் விட்டுப் பேசு என்று
வெட்கம் விட்டுச் சொல்ல மறந்தேன்
மொத்தமாய்க் காதல் செய்து
நுட்பமாய் என்னை இழந்தேன்
அலைபேசி ஓசை கேட்டு
அடுத்த நொடி எழுந்தேன் பேச
அணையும் வரை பேசிப்பேசி
அடுத்த நாள் விடியலை இழந்தேன்
உறங்காத இரவுகளும்
விழிக்காத விடியல்களும்
நம்முடைய காதலைச் சொல்லும்
வாழ்வெல்லாம் நம்முடன் வாழும்
- கதிர்மாயா கண்ணன், பொட்டல், அம்பை வட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.