கடல் போல் வாழ்வோம்!
அலைவீசும் கடல் என்றும்
அமைதியாய் இருப்பதில்லை
கரை தாண்ட முடியவில்லையே என்று.
ஆனாலும் தொடர்ந்து முயற்சிக்கிறது
முயற்சியின் விளைவென்ன தெரியுமா?
கடலின் அசுத்தங்கள் கரை சேரும்.
பரந்து விரிந்த கடலில் நாம்
கழிவு நீரைக் கலந்தாலும்
வான் நன்னீரைக் கலந்தாலும்
கடல்நீர் தன் குணத்தை மாற்றுவதில்லை.
உலகில் கெட்ட குணங்கள் நம்மை
ஒட்டாமல் ஒதுங்கி வாழ்வோம் கடல் போல்.
கடலில் வளங்கள் ஏராளம்
எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை
எவ்வளவு நேரம் முயற்சிக்கிறோமோ
அவ்வளவு பலன்கள் நமக்குக் கிட்டும்.
உள்ள திறமையை மறைக்காமல்
தேடுவோருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
தேடுவோருக்குத் தன் வளத்தை
நிறைவாய்க் கொடுக்கும் கடலுமே
தன் வளத்தில் என்றும் குறைவதில்லை.
கடலைப் போல நாமுமே
நிறைவாய்க் கல்வி கற்றுக் கொண்டு
மற்றவருக்கும் கற்றுக் கொடுப்போம்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.