நீ வருவாய் என...!
மடிசேர் தலையினில்
விரல்கள் அளாவுதல்
மணல் மீனாய் ஒரு
வருகையைத் தாகித்தல்,
ரத்தமும் கண்ணீரும்
நுரைத்துப் பொங்கும்
ரகசிய மூலைகளைத்
தொட்டுணர்த்துதலில்
வெட்கமற்றிருத்தல்,
அன்புணர்வின் தகிப்பில்
சிரிப்பிலும் சொல்லிலும்
கண்ணீர் தழும்ப
முக்குளிவித்த உன்னை
மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன்.
ததும்பித் ததும்பி
பெருகிவழியும் உணர்ச்சிகளைப்
பாதுகாக்க ஏலாது சிதறும்
உயிரைக் கொண்டு செல்ல...
ஏதேனும் பயங்கர ஆயுதத்தோடு
என்னைக் கொன்று செல்ல
நீ வருவாய் என்று...!
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.