கோடை மழை
காத்தடிக்குது மேங்கறுக்குது
ஆத்தாடி இப்ப மழைவரப்போகுது
கூத்தாடுதே மனசு
வேர்த்து ஊத்தும் நிலைமாறுமுன்னு...
இடிஇடிச்சி சத்தத்துல
அடிக்கிற மழையும் பாட்டு
படி அளக்குற
தண்டிலும் நீராகும் கூட்டு
ஊரெல்லாம் நனைஞ்சாச்சு
காரெல்லாம் பொழிஞ்சதுல வெள்ளாமை
தேரென்று ஆகாமலே கல்
ஊன்றென்று ஆகிடுச்சே விளைநிலந்தான்!
விலையாகிப் போச்சு
அலையடிச்ச கதிராகி
தலைமுழுகி நிற்கும் விவசாயம்
நெல்லையளக்க மாறிவருமா மாரி...?
அக்கினிப் பிளம்பான காலத்துல
உக்கிரந்தான் கூடிப்போச்சு
வெக்கையை வாரி இரைக்குது
வழக்கமான கோடைமழை பூச்சு!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.