காதற் காமம்
காதல் உணர்வு காட்டும் மலர்ச்சி
வேதம் என்றே வேட்கை
தூண்டும் மனக்கிளர்ச்சி!
யாண்டும் எவரும்
விரும்பிச் சுவைக்கும்
கருத்தே காதல் காட்சி!
பரிவும் காதல் படகாய்
தெரிந்தே வலம்வரும் தென்றல்
தரமே அறியா
வரமாய் நொடியில் வளரும்
முகந்தெ ரியாத முத்து
அகம்பி ணைக்கும் அன்பு
நித்தம் சுடராய் நினைவில்
முத்தச் சுகந்தரும் முகர்ச்சி!
எதிரும் புதிருமாய் உதிறி
சதியாய் நசுக்கிடும் சாதி
விலக்கிட நினைத்தால் விதியென
உலவி விலகும்
கண்ணியங் காத்திடும் காதலும்
மண்ணிலொ ருமாதிரி!
பலங்கொண் டமட்டும்
கலகம் பிறப்பினும்
உள்ளம் பிணைந்தே உறவைத்
தள்ளி ஓடிடுந் தவறி!
நெஞ்சம் துணிந்திடும் நேசம்
கொஞ்சல் மொழியாய்
கள்ளம் வளர்த்துதான்
எள்ளல் தருமொரு எதிரி!
அகவை பொருட்டிலா தன்பே
நகருங் காதல்
விழிவழி நுழையா
மொழிவடி வாகவே மொய்க்கும்
நவயுகக் காதல்
எவரையும் மயக்கும் என்பே!
கண்ணியந் தவறுங் காதலாய்
விண்ணளக் கமொழிந்து
இனிக்கவே செய்திடும் இச்சையில்
மனிதமும் தவறிடும் மாண்பே!
விரும்பா தவரிடம் வீசிடும்
கருவியாம் அமிலமாய் காமம்
தலையெனக் காதல் தள்ளாடி
விலையா கிநிற்குதே விதியெனப் பண்பே!
(இணைக்குறள் ஆசிரியப் பா)
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.