சேர்ந்து சிரிப்போம்...!
வீட்டில் தொடங்கிய
சிரிப்பு தொடர்ந்தது அன்று
பள்ளி வரைக்கும் இடைவிடாது
சுமைகள் அதனால் தெரியவில்லை
சுமைகளின் பாரம் அகல
சேர்ந்து சிரிப்போம் எப்போதும்...
பள்ளி செல்லும் நாளிலே
தோழன் தோழிகளையெல்லாம்
உறவாய் உடன் பிறப்பாய் நாளும்
எண்ணியே சிரித்த வேளையிலே
பாலியல் எண்ணத்தை ஆழமாய்க்
குழி தோண்டி புதைத்தோமே...
ஏற்றத் தாழ்வுகள்
எல்லாம் மறந்தோம்
பணம்கூட இங்கு
பொருட்டாய் இல்லை
ஒன்றாய்ச் சேர்ந்து சிரித்தே
வாழ்ந்த அந்தப் பள்ளிக் காலத்தில்...
அந்தக் காலம் மீண்டும் வர
அன்பை விதைத்தே
நட்பை அறுவடை செய்வோம்
வீடு சேர்ந்த விளைச்சல் கண்ட
விவசாயி போலே சிரிப்போம்
வருங்காலம் வசந்த காலமே நமக்கு...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.