ஏதேன் தோட்டத்துச் சிற்பிகள்!
ஏதேன் தோட்டம் விளைவித்த
முற்றும் முரணான சிற்பி!
சிற்பியின் கைகளில் தான்
எத்தனை எத்தனை கற்கள் காலத்தின்
வலியை சுமக்கின்றன! -அதன் வலிகள்
உளியின் நுனியில் பிறக்கும்
கவித்துவ உயிரோவியத்தை
தன் உடல் மொழியாகக் கொள்கின்றன!
இதோ, ஆதாம் முற்றும் முரணானவன்!
இயற்கையின் விந்து துப்பிய
எச்சில் உளி செதுக்கிப் பிரசவித்த
இயற்கைச் சிற்பி!
இதே, மீண்டும் ஓர்நாள்
இயற்கையின் முற்று முரணழகை
மார்பிலும் பிறவுறுப்புகளிலும் -அதே
எச்சில் உளி சமைத்த ஏவாள்!
சிற்பியின் கற்பனைக் கருவூலம்!
இயற்கையின் பிரதிச் சிற்பியின் தீண்டல்
அவள் மீது!
முரணழகின் தீண்டலும்
அவன் மீது!
சிற்பியின் கைகளுக்குள் - ஒரு
சிறு பழத்தின் சுவை!
இச்சைப் பழங்களை இருவரும் உண்டனர்
இச்சை புனிதத்தின் தன்மை பெற்றது!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.