என்னிலை மாறி விட்டதென...!
சில துளிகள் என்மீது படர்கின்றன
நான் கிழக்கு முகமாக நடந்து செல்கிறேன்
இன்றைய நாள் முழுதும்
நான் வெளியிட்ட சினத்தின் வெப்பம்
புறமுதுகில் பட்டுத் தெறித்தபோதும்
அவை அதிர்வை ஏற்படுத்தியிருக்கக் கூடும்?
சில துளிகளால் - என்
சினத்தின் வெப்பம் உறிஞ்சப்படுகின்றன
சில்லென காற்றை வீசிக் கொண்டு வந்த
சில துளிகள் என்மீது படர்கையில்
சற்றே நடுக்கமுற்றேன் -ஆமாம்
எனக்குத் தெரியும் நான்
என்னிலை மாறிவிட்ட தென!
மறதிதான் வானிலை அறிந்த பின்பும்
குடையெடுக்க மறந்து விட்டேன்.
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.