பஞ்சாலைச் சங்கு
நாளுக்கு இரண்டுதரம்
தவறாமல் ஊதுகிறது
எங்கள் ஊர் பஞ்சாலைச்
சங்கு...
காட்டு வேலைக்கும்
மாட்டுக்குத் தண்ணிக்கும்
பாலர்கள் பள்ளிக்கும் - என
காலையிலும்...
கொட்டகைக்கு போகவும்
சீட்டாட்டம் முடிக்கவும்
மன்றம் கூடி பேசவும் - என
மாலையிலும்...
பரிகாசம் காட்டிய
பஞ்சாலைச் சங்கு
இப்பொழுதெல்லாம்
ஊதுவதே இல்லை...
விவரம் அறிந்தால்
பருத்தியே விளையாத ஊருக்கு
பஞ்சாலை எதற்கு -என
மூடிவிட்டார்கலாம்...
பஞ்சாலைச் சங்கின்
பரிதவிப்பில் சந்தைக்கு
விரைந்தேன் மணிஅடிக்கும்
கடிகாரம் வாங்க...!
- ரா. தீர்க்கதரிசனன், தேனி..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.