நிலத்தடி நீர் உயர்த்திடுவோம்!
சேமிப்போம் சேமிப்போம்
மழைநீரைச் சேமிப்போம்
பூமியினைக் காப்பதற்குப்
பொழிமழையைச் சேமிப்போம்.
சாமியெனும் மாரிமழை
சந்ததிக்கும் சேமிப்போம்
நாமிதனை வீட்டினிலே
நல்லதெனத் தொடங்கிடுவோம்.
சாலையிலே பெய்யும் மழை
சாக்கடையிற் சேராமல்
காலமிட்ட கட்டளையாய்க்
கவனமுடன் சேமிப்போம்.
பாமரரும் அறியவைத்து
பட்டிதொட்டி யெங்குமிதை
சேமிக்கும் முறை சொல்லிச்
சேர்த்து வைப்போம் மழைநீரை.
கட்டடங்கள் தோறும் மழை
சேமிக்கும் வண்ணமுடன்
தொட்டியினை அமைத்திடுவோம்
நிலத்தடி நீரினை உயர்த்திடுவோம்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.