உலகினிலே சிறந்ததொரு நாடு
உலகினிலே சிறந்ததொரு நாடு
உள்ளத்தில் மகிழ்வாக நாடு
நலமுறவே சுதந்திரத்தைப் பெற்றோம்.
நல்லதமிழ் பயன்பெறவே கற்றோம்.
பலமிகவே பல்துறையில் வென்று
பறைசாற்றி புகழ்பெற்றோம் நின்று.
நிலவினிலே காலூன்றி நிற்போம்.
நிறைவாக ஒன்றாகி வாழ்வோம்.
ஆக்கத்தில் முன்னேற்றம் கொண்டோம்
அறிவியலில் சாதனைகள் கண்டோம்.
காக்கின்றார் நம்நாட்டை நன்றாய்
கைக்கூப்பி வணங்கிடுவோம் ஒன்றாய்.
நோக்கத்தில் வல்லரசாய் ஆக்க
நொடிப்பொழுதும் வளர்ச்சியினில் காக்க
ஊக்கத்தில் உயர்ந்திடவே உழைத்து
உன்னதமாய் வளர்ச்சியிலே உயர்த்து.
- கவிஞர் கோவிந்தராஜன், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.