தாயின் மணிக்கொடி
பட்டொளி வீசிப் பறந்திடவும் பாடுபட்டோர்
இட்டமுடன் இன்பச் சுதந்திரத்தை ... எட்டிடவும்
வாய்த்த பெருமிதம்மூ வண்ணக் கொடியதுவே
தாயின் மணிக்கொடியே தான்.
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் நெஞ்சத்தால்
தீரமுடன் போரிட்டார் தெம்பாக ... பாரதத்தின்
கோயில்தீ பம்போல் கொடிபறக்கக் கண்டாரெம்
தாயின் மணிக்கொடியே தான்.
திருப்பூர்க் குமரன் திறம்படக் கையில்
விருப்பாய்க் கொடிகாத்து வீழ்ந்தான் ... தருவதற்கு
நேய உயிர்கொண்டான் நெஞ்சம் சுமந்திட்டான்
தாயின் மணிக்கொடியே தான்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.