அடுத்த தலைமுறைக்குத் தந்திடுவோம்!
போராடிப் பெற்ற சுதந்திரத்தை
சீராட்டி நாளும் மகிழ்ந்திடுவோம்!
வீரத்தால் விளைந்த விடுதலையை
விண்ணதிர நாமும் வெளிப்படுத்துவோம்!
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு
இறுதி மூச்சு வரையில் முயன்றிடுவோம்!
இன்னல்கள் இல்லா இத்திரு நாட்டை
இமயத்தில் நின்று போற்றிடுவோம்!
அழகாய்ப் பெற்ற சுதந்திரத்தை
நேர் திசையில் செலுத்திடுவோம்!
சுதந்திரத்திற்காக இன்னுயிர் தந்த
தியாகிகளை நாளும் நினைத்திருப்போம்!
எவ்விதச் சண்டைகளும் இல்லா நாட்டை
அமைதிப் பூங்காவாய் மாற்றிடுவோம்!
நாட்டு மக்கள் அனைவருடனும்
அன்பு மொழியில் பேசிடுவோம்!
பிறந்த நாட்டையேப் பிரித்துப் பார்க்கும் எவரையும்
இரும்புக் கரத்தால் அடக்கிடுவோம்!
தாய்த்திரு நாட்டையேத் தாங்கிப் பிடிக்கும்
தியாகக் கரங்களை வலுவேற்றுவோம்!
சுதந்திரக் காற்றில் உன்னத மணத்தை
நன்றாய் நாளும் சுவாசிப்போம்
சுதந்திரத்தின் உண்மைப் பொருளை
அடுத்த தலைமுறைக்குத் தந்திடுவோம்!
- ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை-90.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.