நமக்கு வந்த சுதந்திரம்...!
இனிப்பு சாப்பிட்டுவிட்டு
இன்றோடு மறப்பதல்ல
சுதந்திரம்...
வெறுப்பு மிகவாகி
வெறிகொண்ட தீவிரவாதிகளை
வெளியே அலையவிடுவதல்ல
சுதந்திரம்...
சாதி, மதம், மொழியென்று
சண்டை போடுவதல்ல
சுதந்திரம்...
தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும்
தவம்கிடந்து,
தகராறு வளர்ப்பதல்ல
சுதந்திரம்...
அழகைக் காட்டுவதாய்
ஆடையைக் குறைப்பதல்ல
சுதந்திரம்...
ஆசைப் பெருக்கில்
அரசு சொத்தை,
ஆளாளுக்குச் சுருட்டுவதல்ல
சுதந்திரம்...
இந்த சுதந்திரம்
நொந்து பெற்ற சுதந்திரம்...
இந்தியர் யாவரும்
ஒன்றாய் வாழ,
நன்றாய் வாழ
நமக்கு வந்த சுதந்திரம்...!
- செண்பக ஜெகதீசன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.