என் காதல் ரசித்திட....!!
நீல நிறப் போர்வையை
நீண்ட தூரம் விரித்து விட்டார்களோ...?
விவரிக்க இயலா விசித்திரங்களை
விந்தையென நீ கொண்டிருக்க
தொலைதூரம் உள்ள மறுகரை
நோக்கியே தொய்ந்திட்ட விழிகளுடன்
தொலைத்து விட்டேன் உன்னுள்ளே!
காற்று எழுதிய கவிதையாய்
என்னை அள்ளி அணைத்திட
அழகாய்த் தோன்றிடும் அலையே!
கைகோர்த்துக் காற்று வாங்கி
அத்துணையும் மறந்து ஆழ்மையுடன்
உன் கரையில் நடந்திருக்கையில்
என் பெயரும் என்னவன் பெயரும்
நான் பொறித்து நின்றிட
கரை வந்து வந்து போகிறாயோ?
என் காதல் ரசித்திட....!
- கிருத்திகா கணேசன்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.