சொற்களின் வலி
ஒரு சொல்லை
எவ்வளவு தூரம் நம்புவது...
அன்றொரு நாள்
கைநிறைய அள்ளி
என் முகத்தின்மீது வீசினாய்...
சொல்தான்
காற்றில் மிதந்து...
அத்தனை ஜீவராசிகளையும்
உயிர்ப்புடன் வைத்திருப்பதாய்...
ஆதங்கப்படுகிறாய்...
சேகரிப்பவர் யாருமின்றி...
எங்கும் அனாதையாகக்
கிடக்கின்றன அந்தச் சொற்கள்...
நீ இறைத்த சொல்லைத்தான்
இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன்
பூ நிலா வானம் நட்சத்திரம்
எதிலிருக்கும்...
சொல்பவர்களுக்குத் தெரிவதில்லை
சொல்லின் வலி...
வீசுவது எளிது
உருவாக்குவது
மிகக் கடினமானது!!!
- கரூர் பூபகீதன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.