சுழியம்
சுழியத்தின் முன் இடப்படும்
எண்களைக் காட்டிலும்
சுழியத்தின் பின் இடப்படும் மற்றொரு
எண்களைக் காட்டிலும்
கூட்டல் கணக்கில் தவறுசெய்கிற
மூன்றாம் வகுப்புக் குழந்தையின்
தழைகீழான
ஏறு வரிசை இறங்கு வரிசை
ஏணி எண்களில் ஒளிந்திருக்கும்
இரண்டு என்ற எண்ணிற்கு
ஒரு நீண்ட மூக்குப் பிளந்த தக்கைக் கால்கள்
முட்டக் கண்ணைப் போல சுழியங்கள்
மற்ற எண்களில் சிலவற்றைப் பிய்த்து
கோர்க்கப்பட்ட சிறகுகள் அடர்ந்த
'எண்” வாத்துக்கள்
காகிதத்தில் நீந்தவேச் செய்வும்!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.