வரும்காலம் வசந்த காலம்
வரும்காலம் வசந்த காலம்
எதிர்காலம் எங்களுடையது என்போம்
எண்ணத்தில் ஏற்றம் கொண்டோம்
எட்டாத உலகினையும் எட்டிப்பிடிப்போம் !
பாருக்குள்ளே பட்டம் ஏற்போம்
பாமரனுக்குச் சொல்லிக் கொடுப்போம் !
இலட்சிய இளைஞர்கள் நாங்கள்
நெஞ்சினில் விவேகம் கொண்டோம் !
இந்திய மாணவர்களின் முதல்வராய்
தேசத்தின் துடிப்பாய்ப் பிறந்தோம் !
காந்தியக் கொள்கை ஏற்றோம்
கலாம் அறிவைப் பெறுகின்றோம்!
பெரியாரின் செயல்களைக் கண்டோம்
புவிக்குள் பகுத்தறிவாளராய் புகுந்துள்ளோம்!
மூடர்கள் விதைத்த முட்புதர்களைக் களைவோம்
கோடனுகோடி மரங்கள் நடுவோம்
நீரின் மேலண்மையை உயர்த்துவோம்!
மின்னாற்றல் வளம் கண்டோம்
குக்கிராங்களில் குடிசையைக் கண்டோம்
ஒளிமயமான வாழ்க்கையைத் தந்தோம்.
புதிய தலைமுறையாகச் சரித்திரம் படைப்போம்
மானிடத் தத்துவங்களை உணர்ந்தோம்.
பிறப்பு என்பது ஒரு முறையைக் கண்டோம்
தோல்வி என்பது பலமுறையாய் அறிந்தோம்
வெற்றி என்பது தொடர்கதையாய்த் தொடருவோம்
இறப்பு சொல்லும் பலதலைமுறையாய் வாழ்வோம்
- சி. இரகு, திருச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.