இன்று வந்த தீபாவளி
நம் இல்லங்கள் தோறும்
உள்ளங்கள் பொங்கும்
உற்சாகத் தீபாவளி...
நல் எண்ணங்கள் கூடி
துன்ப, துயரங்கள் கரைக்கும்
இன்பமழை தூரலான தீபாவளி...
செல்வந்தருக்கும்
சாமான்யமானவர்க்கும்
சமத்துவம் உணர்த்த
வெடிச்சத்தமிடும் தீபாவளி...
ஒவ்வொருவர் சந்திப்பிலும்
புன்னகைத்தபடி
கரங்களின் குலுக்களில்
நேயம் சுரக்கும்
ஒளிமயமான தீபாவளி...
தலையில் எண்ணை
உடலுக்குள் இறங்க
மனச்சுமைகள் இலேசாகும்
குளிர்ச்சியான தீபாவளி...
ஆடைகள் பல உடுத்தி
வண்ணத்துப் பறவைகளாய்ப்
புத்தாடை அணிந்து மிளிரும்
துள்ளலான தீபாவளி...
பலகாரம் பல உண்டு
பகிர்ந்தளித்து
மகிழ்ச்சி கொண்டு
மத்தாப்புச் சிதறலாய்
இன்று வந்த தீபாவளி..!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.