ஆனந்தத் தீபாவளி
கொண்டாடுவோம்...
தீபவொளியுடன் தீபாவளி
அறிவொளியும் ஏற்றி.
*****
பூரிப்போம்...
புத்தாடைகள் உடுத்தி.
புதிதாவோம்...
புத்தகங்களைப் படித்து.
*****
மகிழ்வோம்...
இனிப்புகள் வழங்கி.
மலர்வோம்...
இன்சொல் சொல்லி....
*****
பழகுவோம்
மதுவில்லாப் பண்டிகை
உதவுவோம்...
இல்லார்க்கு இயன்றதை.
*****
சுத்தம் காப்போம்...
வெடிகளைத் தவிர்த்து.
சொர்க்கம் காண்போம்...
மரங்களை வளர்த்து.
*****
கொண்டாடுவோம்
தீபவொளியுடன் தீபாவளி
அறிவொளியும் ஏற்றி.
- ம. கவிக்கருப்பையா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.