அழகிய பெண்ணை...!
அறுசுவை விருந்தாய் அவளது பார்வை
அள்ளிட விழுகிறதே
மறுமுறை பார்க்க மாதவஞ் செய்ய
மனமது எழுகிறதே
குறுகுற் வென்னும் குமிண்சிரிப் போடு
கோலமும் விழுகிறதே
நறுமுகை யன்ன மலர்களின் மென்மை
நங்கையைத் தொழுகிறதே!
உள்ளமு ரைத்திடும் உணர்வினில் கலந்திடும்
உவகையை யென்னென் பேனோ
தெள்ளிய தேன்தரும் தீஞ்சுவை போலெனச்
செப்பிட நிறைவா காதே
கொள்ளையின் பந்தரக் கூறிடுஞ் சொற்களும்
குறைவென லாகிப் போமே
அள்ளிடு மழகியென் அற்புதக் காதலி
அவள்தரும் முத்த மன்றோ!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.