உயிர்த்தெழுந்த உண்மை
நெரிசல் மிகுந்த சாலையோரம்
சிதிலமடைந்த சுவரின்மேல்
சாய்வாகக் கிடத்தப்பட்டிருந்தன
பசிய நீள்மூங்கில் பிரேதங்கள் சில.
அதனருகே
கித்தான் விரிப்பில் தன்னை இருத்தி
அப்பிரேத அங்கங்களை
சம நீள பாகங்களாக செதுக்கியவாறிருந்தார்
முண்டாசு கட்டிய
சருகு தேக விவசாயி.
ஓரேழு நாட்களில்
மிக நேர்த்தியாய் முடையப்பட்டிருந்தது
பல கூடைகளின் சரீரம்.
ஆசிர்வதிக்கப்பட்டவர்களே...
அம்மூங்கிலில் புதையுண்ட வண்டுகள்
பிறிதொருநாளில்
அக்கூடையில் சேமிக்கப்பட்ட
கனிகளின் அங்கம் துளைத்து
உயிர்த்தெழுந்த உண்மையை
அறிவீர்களா இப்பொழுதேனும்...
- வான்மதி செந்தில்வாணன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.