அன்புள்ள ஆண்ட்ராய்டு!
எனக்கு
எல்லா வகையிலும்
உதவியாய் இருந்த நீ
இன்று இல்லை!
அதிகமான
வார்த்தைகள்
பேசியும் கேட்டிருக்கிறாய்
அதிகமாய் வாசிக்கவும்
சொல்லியிருக்காய்
என் விரல் தீண்டல்களை
விரும்பியே ஏற்பாய்
மார்பில் உறங்கியே
பழக்கப்பட்டாய்
இதுவரை எதிரியாய் பாவித்த
இல்லாளும் இப்போது
புன்னகைக்கிறாள்
பணம் தரும் முதலாளியும்
பெருமூச்சொன்றை
விடுகிறார்
இவர்களுக்கு எப்படி தெரியும்
உனக்கும் எனக்குமான
உள்ளார்ந்த நெருக்கம்
நாமிருவருக்கும்
கவனிப்பதில்தான்
சிறு கவனக்குறைவென்றே
நினைக்கிறேன்
எது எப்படியே இனி
நீண்ட ஓய்வுதானுனக்கு
புதிதென்று வாங்கும் வரை
என்னன்புள்ள ஆண்ட்ராய்டே ..!!
- கரூர் பூபகீதன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.