துளிப்பாக்கள்
ஊர்கூடித் தேர்
இழுக்கிறார்கள் திருவிழாவில்
மறுக்கப்படும் சேரி
*****
மார்கழி மாத
பஜனைக் கோலம்
நினைவிலாடும் பிரசாதம்
*****
ஆவணி வீதிகளில்
படியளக்கும் திருவிழா
வீட்டில் காலி அரிசிப்பானை
*****
கைப்பேசியின் திரை
ஒளிர்கிறது முகத்தில்
அப்பாவின் கண்ணாடி
*****
அப்பாவின் கண்ணாடி
அழகாய்த் தெரிகிறது
அம்மாவின் முகம்
*****
அம்மாவின் முகம்
பிரதிபலிக்கிறது
அப்பாவின் கவலை
*****
அப்பாவின் கவலை
பிள்ளையிடம் இருக்கிறது
ஆண்ட்ராய்டு போன்
*****
காதல் ஜோடி
பிரிக்கப்படுகிறது
வேடன் அம்பு
*****
அம்பு எய்த இடம்
தைக்கப்படுகிறது
அப்பாவி இதயம்
*****
தூக்கம் வராமல்
தவித்துப் போகிறது
ஓடும் கடிகாரம்
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.