மூளை
மூளை ஒன்றே நரம்புமண்டலத் தலைமை
மூச்சும் பேச்சும் தருமுயர் செயல்மை
மூடரென்ற இழிசொல் மாற்றும் தகைமை
மூவுலகை வெல்ல மூளையே முதன்மை!
ஆறறிவு மனிதமூளை அளவில் பெரிது
ஆற்றலுடன் கண்பார்வை செயலாக்க உரிது
ஆக்கமுடன் பெருமூளையில் நரம்புத்தொடர் மடிப்பு
ஆராயகற்க உதவுமிதன் முன்மடல் துடிப்பு
விழிப்பில்லா கொட்டாவியும் மூளைச்செயல் வட்டுக்குள்
விழிப்புள்ள சிந்தனை புரிதலுமிதன் கட்டுக்குள்
விழியாய் விழிப்பாய் நடத்துமிதன் மெட்டுக்குள்
விழிபிதுங்கி நிற்பதேன் பரபரப்புத் தட்டுக்குள்!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.