இடது
எல்லோரும் என்னுடைய அன்றாட
பழக்க வழக்கங்களை மிக உன்னிப்பாக
கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள்
என்னுடைய பழக்க வழக்கங்களைக் கண்டால்
அருவருக்கத்தக்க முகவுணர்ச்சிகளை
பொத்தென வெளித்தள்ளிவிட்டு
சிரிக்கவும் செய்கிறார்கள்.
என் வாழ்வில் சிலரை
இது போன்ற பழக்க வழக்கம்
உடையவர்களைக் கண்டதுண்டு.
அவர்களும் என்னைப் போலவே
கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும்
பொதுவெளியில் குரூரமாக இரையாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவைகளை நான் மிக சாமர்த்தியமாக
புறந்தள்ள எண்ணியதுண்டு.
அவர்களும் அப்படியேதான்.
எழுத்துக்களை இடமிருந்து இடக்கையில்
எழுதுகையில்
சாய்ந்த என் எழுத்தோவியங்கள்
கொடூர முறையில் கொல்லப்படுவதற்கெனக்
கேலி செய்யப்படுகின்றன.
என் எல்லா இடக்கைப் பழக்கங்களையும்;
எனனைப் போன்றவர்கள் ஒப்புக் கொண்டபடியால்
இடக்கைப் பழக்கம் எனக்கும் சரிதான்.
அவ்வப் போது
நடத்தப்படுகிற கேலிமுறையிலான
தாக்குதல்களுக்கு
என் இடக்கை
எல்லாவற்றிலும்
சிறந்த ஆயுதம்தான்.
அதனை மாற்றிக் கொண்டேன்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.