படச்சுருள்!
அவ்வப்போது அந்தப் பெட்டியை
எதார்த்தமாக பார்க்கிற போது
படச்சுருள் குப்பிகள் தான்
சட்டென ஞாபகம் வருகின்றன.
முதன்முதலில் சூரியக்கதிர்களை
நிழற்படம் எடுக்க முயன்று
'கண்கள் கூசுகிறதே”யென சிமிட்டிய பொழுது
பிடிக்கப்பட்ட நிழற்படம்
இன்னும் 'லெபாராட்டரிக்கு” கூட செல்லவில்லை.
அவ்வப்போது அந்தப் பெட்டியை
எதார்த்தமாக பார்க்கிற போது
படச்சுருள் மீது படர்ந்து கிடக்கும்
'சீகைக்காய்” வாசனை
இன்னும் அப்படியே அந்தக் காட்சிகளுடன்
அப்பிக்கொண்டு நிற்கின்றன.
இப்போது என்கைகளில்
வண்ண இலக்க படவீழ்த்திகள்
தவழ்ந்து கொண்டிருக்கின்றன.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.