பாராட்டு!
வேராக நல்லறங்கள்
பாராள கொடுத்தஅய்யன்
சீராளன் திருவள்ளுவர்
பாராட்டு விரும்பினாரா!
தானாக வந்தடையும்
பாராட்டு புகழெல்லாம்
வானாளும் மகத்துவமாய்
ஆராதனை சிறப்பன்றோ!
ஒருவர் பாராட்டு
உருவம் பெறுவதற்காய்
பருவம் கண்டாற்றும்
தருமம் சிறப்புறாது!
உள்ளன்பு நிறைந்து
கள்ளமில்லா விருப்பில்
எள்ளளவு ஈந்தாலும்
அள்ளிடலாம் பாராட்டு!
தினம்வரும்நல் இலக்கியத்தில்
இனங்கண்டு கருத்திற்கு
மனமார பரிசுதரும்
வனப்புமுத்துக் கமலயிதழ்
இலக்காகப் பாராட்டு
அலகீடாய் இணையத்தில்
உலகெங்கும் தமிழெழுத்தர்
மலரமுத்துக் கமலயிதழ்
பாலையில் நீரூற்றாய்
மாலைகள் பாக்களாகும்
ஓலையின் இலக்கியவேர்
ஆலைமுத்துக் கமலயிதழ்
இலக்கியப் படைப்புகளால்
வலம்வரும் எழுத்தாளர்
நலமோங்க ஊக்குவிக்கும்
பலமெனப் பாராட்டு!
நானென்றும் கவிஞனில்லை
தேனெனும்பேர் இலக்கியத்தில்
மானெனயான் கற்றகல்வி
வானெனவார்த் தபாராட்டு
வற்றாத கவிஞர்களைப்
பெற்றமுத்துக் கமலத்தில்
சிற்றெறும்பு நான்பரிசைப்
பற்றியதே பாராட்டு!
- நாகினி, துபாய்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.