இலக்கணங்கள்!
இலக்கணங்கள் இலக்கணங்களாக மட்டும்
இருந்தாலென்ன பயன்? நேர்சிந்தனைச் சமூக
இயல்பை முன்னின்று காப்பவையே இலக்கணமாமே
இலக்கணங்கள் இலக்கிய வரம்புகளை மீறி
இக்காலத்துக்கேற்ப புதிய எளிய
இலக்கியங்களை தன்னுள்ளிருந்து உயிர்ப்பிக்க வேண்டும்.
இலக்கணங்கள் அலங்காரம் பகட்டலங்காரமின்றி
இக்காலத்துக்கேற்ப வீரிய நடைபோடும்
இயல்புத்தன்மை பெற்று விளங்க வேண்டும்.
இயல்பினின்று நீங்கி தன்னெழுச்சி யோடு
விளையும் பயிர்களாக வீரியமிக்க
இலக்கியச் சொற்களைப் புதிதாய் விளைவிக்க வேண்டும்.
இலக்கண மன்றங்கள் எளிய தன்மையுடன்
இலக்கியம் வளர மொழிப்பண்பும் திறமும்
இளமை ஊட்டுந் தன்மையும் பெற்றிலங்க வேண்டும்
இல்லறத் திறமற்ற சொற்களை காலவழுவென
விலக்கித் திறமுடன் மொழியைக் காக்கும்
சிந்தனை முறைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்
இலக்கணக் கொம்பினைப் பிடித்தாடும் பழமை
இனவாதக் கழிவு நீங்கி எளிமைப் பதங்களோடு
இனக்கமான வாழ்வியல் சமூகம் விளைத்திட வேண்டும்
இலக்கணங்களெல்லாம் வாழ்வியல் முறையிற்
இயல்புடன் ஒத்துவாழ்கின்ற சமூகம்
பிறந்திட பழமைவாத வரம்புகளை ஒழித்திட வேண்டும்.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.