உயிர்த்தெழுந்த ஓர் மனிதன்
என்ன செய்வது என்று தெரியாது
கண்கள் விக்கித்து விழித்துக் கொண்டிருக்கின்றன.
சொற்களை ஊமைகளாக்கி வைத்தால்
இந்த உலகம்
முற்றும் துறந்த ஓர் அமைதிக்காடாகத் திகழும்
எங்கும் எந்தத்திசை நோக்கி நடந்தாலும்
எங்கும் அமைதி கொலைபட்டுக் கிடக்கிறது.
பிணங்கள் அளவளாவிக் கொண்டிருப்பதைக் கண்டு
நேற்று இறந்த பின்
இன்று உயிர்த்தெழுந்த ஓர் மனிதன்
உலகம் நடுநடுங்கச் சிரிக்கலானான்
மேலும் மேலும்
பிணங்கள் அளவளாவிக் கொண்டிருக்கின்றன.
இடைவெளி இன்றிக் கொலைப் படுகளங்கள்
நிகழ்ந்த வண்ணமிருக்க...
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.