மனிதனின் நீதி!
அத்தனை
அசுத்தக் காற்றையும் உண்டு
ஆக்சிசனாய் மாற்றி
வெளியேற்றி
உன் சுற்றம் அனைத்தும்
நன்முறையில்
சுவாசித்து வாழ
உதவினேன்!
வானில் செல்லும்
கருமேகங்களைக் குளிர்வித்து
மழையாகப் பொழியச் செய்து
உனக்கும்
உன் விவசாயத்திற்கும்
உதவினேன்!
என் நிழலில்
உன் சந்ததியினர்
விளையாடி மகிழவும்
உன் உடல் களைப்பிற்கு
ஓய்வெடுக்கவும்
உதவினேன்!
இப்படி எத்தனை முறை
உனக்கும் உன் சுற்றத்துக்கும்
உதவினேன்!
அத்தனையும் மறந்து
என்னை வேரோடு
வெட்டிச் சாய்க்க
உனக்கு எப்படித்தான்
மனம் வந்ததோ...?
ஓ...!
நீ மனிதன்
நான் மரம்...
இதுதானே
உன் நீதி!!
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.