கடவுளில்லாக் கோயில்கள்...!
சொந்தங்கள்
சுமையாகின்றன
சொகுசு வாழ்க்கையில்...!
பிள்ளைகளுக்கும் தாயுக்குமான உறவு
காலை ஆறு முதல் எட்டானது
அதனால் அதிகரித்தது அனாதையில்லங்கள்…!
கோட்டைக்குப் போகவேண்டியவன்
கோர்ட் படியேறுகிறான்
அவசரத்தின் அவலமிது…!
புரிதலில்லாத வாழ்க்கை
பாதியினில் பொசுங்கி விடுகிறது...!
காதலும் கசக்கிறது...!
இளைய தலைமுறை
முதியோரின் அனுபவத்தைப் பெற மறுக்கிறது
வேதனைகளை மடியில் சுமக்கிறது...!
பணமே வாழ்க்கையெனில்
பெற்றோர் நம்மை பெறாமலிருந்திருக்கலாமே...!
குழந்தைகளின் குமுறலிது...!
சிந்திந்துத் பார்
உன்னை உன் தாத்தா எப்படிக் கொஞ்சினார்!
உன் பிள்ளைக்கு அது கிட்டியதா?
உறவுகளோடு உறவாடுங்கள்
முதியோர் இல்லா இல்லங்கள்
கடவுளில்லாக் கோயில்கள்...!
- பீ. பெரியசாமி, விளாப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.