பொங்கல் திருநாளைப் போற்று!
எத்தனையோ பண்டிகைகள் இங்குதோன்றி வந்தாலும்
அத்தனையும் பொங்கலுக்கீ டாகாதே - முத்தன்ன
இங்குழவர் போற்றும் இயற்கையினைக் கொண்டாடும்
பொங்கல் திருநாளைப் போற்று.
இயற்கையைப் போற்றும் இனிய திருநாள்
உயர்வை அளிக்க உதிப்போன் - செயல்போற்றி
எங்கும் உழவர் இனிதுறக் கொண்டாடும்
பொங்கல் திருநாளைப் போற்று.
செங்கரும்பி னிக்க சிறந்துவிளைச் சல்தரும்
பங்கமிலாப் பூமி பகலவன் - தஙகமெனப்
பொங்கியே போற்றிடப் புத்தரிசிப் பானையிடும்
பொங்கல் திருநாளைப் போற்று.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.