புத்தாண்டில் வேண்டும பொறுப்பு!
எல்லா வளம்பெருக எல்லோர் நலம்பெருக
நல்லோர் புரியட்டும் நல்லாட்சி - வல்லோர்கள்
வைத்ததுவே சட்டமெனும் வன்மைநிலை மாறிடவே
புத்தாண்டில் வேண்டும் பொறுப்பு.
மனக்கவலை தீர்த்தருள்க, மாறாத இன்பம்
தினமும் துணைவருக தெய்வ - நினைவுடனே
எத்திசையும் சுற்றிவர என்னிறைவா உன்றனுக்குப்
புத்தாண்டில் வேண்டும் பொறுப்பு.
மக்களாட்சி யென்பதற்கு மக்கள் நலம்பேணலே
தக்க பொருளாகும் தன்மையன்றோ - மிக்கதொரு
முத்தாய் வழியிருக்க முன்னேறும் ஆட்சியர்க்கோ
புத்தாண்டில் வேண்டும பொறுப்பு..
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.