புத்தகத்தால் வந்த புகழ்.
உலக இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டுப்
பலமொழியில் ஆக்கப் படைப்பாய் - நிலைபெற்ற
புத்துருவாய் கார்ல்மார்க்ஸ் பொன்னெழுத்தாய் மூலதனம்
புத்தகத்தால் வந்த புகழ்.
பால்வீதி ஆலா பனையென்னும் அற்புத
நூல்நெய்து செந்தமிழ் நோன்பினைப் போலொழுகி
முத்தமிழ்க்க விக்கோ முழுவதும் பெற்றதெலாம்
புத்தகத்தால் வந்த புகழ்.
செல்வத்தால் வந்தபுகழ் சேரா நிலைக்காது
நல்லமெய்ப லந்தரு நற்புகழும் - நில்லாது
மெத்தப் படைப்புகளாய் மேன்மையைப் பெற்றிருக்கும்
புத்தகத்தால் வந்த புகழ்.
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.