என்றுதான் நிறைவேறுமோ?
கைகள் கோர்த்தே
கடற்கரையின் கடைசி வரை
பேசிச் செல்ல ஆசை...
பிறை நிலவின்
முனையில் நின்று
சாய்பலகையாட ஆசை...
ஜொலிக்கும் நட்சத்திரத்தை
ஜிமிக்கிக் கம்மலாக்கிக்
காதிலணிய ஆசை...
பட்டாம்பூச்சியைச்
பட்டுச் சேலையாக்கிப்
பறந்து செல்ல ஆசை...
குயிலோசையும் குழலிசையும்
காது குளிரக்
கேட்க ஆசை...
நெற் பயிர் விளைந்த
மண் வாசனையைச்
சுவாசித்து மகிழ ஆசை...
மாட்டு வண்டியில்
அமர்ந்து
பயணிக்க ஆசை...
மழலையோடு மழலையாக
மீண்டும் பள்ளியில்
படிக்க ஆசை...
புத்தகக் குவியலோடு
எழுத்துக்களாகச் சேர்ந்து
சொல்லாக ஆசை...
எத்தனை எத்தனை
ஆசைகள்
என் மனத்தில்...
என் ஆசைகள்
எல்லாம்
என்றுதான் நிறைவேறுமோ?
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.