கலப்பினங்களுக்கான விதி...?
ஒன்றுக்கொன்று தொடர்புடையவை நிறைய உண்டு.
நிறங்களிலும் சில உண்டு.
தொடர்புடைய நிறத்திலிருந்து ஒளிரும் போது
அவைகள்
தன்னியல்பினின்று மாற்றம் கொள்கின்றன.
புதிய ஒளிப்பிழம்பை பீறிட்டெழச் செய்கின்றன.
கத்தரிப்பூக்களைச் சில நேரங்களில்
அதிக வெளிச்சத்துடன் பார்க்கிற போது
நம் கண்களுக்கு அவை கருமை நிறம் கொள்கின்றன.
வண்ணங்களின் புணர்ச்சி நிலையானது
கலப்பினங்களுக்கு வழிகாட்டுவதாகவே
இருக்கின்றன.
அதனால் தானே வானவில்?
கலப்பினங்களுக்கு விதி
வானவில் ஆகாதோ?
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.