உயிர் மீட்பு
இதயவீணையில் நீ இசைத்த
ராகங்கள் நாதப் பிரவாகமாகி
குற்றாலச் சாரலாய் குளிர்விக்கிறது...
ஏகாந்தமாய் எரியும் நிலவின்
தண்ணொளியும் தீயாய்
தகிக்கையில்...
என்றோ நீ தந்த பார்வை வருடல்கள்
பாலைவனச் சோலையாய்
பரவசப்படுத்துகிறது...
உயிருக்குள் உருகி வழியும்
உன் நினைவலைகள்
என்னை ஆழ அமிழ்த்தி மீண்டும்
மீண்டும் மூழ்கடிக்கிறது...
மௌன வனத்துக்குள்
உன் சுவாசக் காற்றும்
உயிர் காக்கும் மருந்தாகும்...
சற்றேத் திரும்பி
பார்வை பரிசமிடு...
சாகரப் பறவையாய்
மீட்டுக் கொள்கிறேன் உயிரை...
- மதுரா, தஞ்சாவூர்.
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.