அந்த வீதி!
அந்த வீதி
அந்த ஊரில் அவ்வளவு பிரபலமானது.
சில கடைகளும் அங்கே
அவற்றுக்கான சில உறைகளை விற்கின்றன.
சில இளைஞர்கள்
அந்த வீதிக்குச் செல்கிறார்கள்.
சில நடு வயதுக்காரர்கள்
அந்த வீதிக்குச் செல்கிறார்கள்
சில கிழவர்களும்
அந்த வீதிக்குச் செல்கிறார்கள்.
வீதியின் முன் சிலர்
முகம் நாண மறைந்து மறைந்து வருகிறார்கள்
சிலர் அவர்களை நோக்கி
முன்னேறி
அவர்களை வேறு யாரும் அந்தரங்கச் சிறை
செய்து விடாதபடிக்கு
அடித்துப் பேசி விலையை முடிக்கிறார்கள்
விற்கப்பட்ட பின்னும்
மீண்டும்
அடுத்த நொடிக்கு விற்ற பொருளைத்
தேடி வருகிறான் மற்றொருவன்
அந்த வீதி வழியே...!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.