வேண்டிய வரம் யாதோ?
அவனைச் சுற்றி எல்லாமே நடந்து கொண்டிருந்தன
சிறு பறவை ஒன்று
நுனி மரக்கிளையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்
கடுவன் என்னும் ஆண் நாய் தன் பெட்டையுடன்
தெருவோரத்தில் சுற்றித் திரிந்தபடியிருக்கும்
யாரோ ஒருவன்
அவனை தாண்டிச் சென்று கொண்டிருப்பான்
விடியற் பொழுதின் மயக்கம் தெளிந்த சூரியன்
விரைந்து தன் தேர்க்காலைப் பூட்டி
வானில் வலம் வந்து கொண்டிருப்பான்.
புல் தரையின் மீதமர்ந்து
கண்களை மூடி
இருக்கைகளையும் வானத்தை நோக்கி
உயர்த்திய படியிருக்கும் ஒரு தவயோகி (?)
உள்ளே ஆயிரமாயிரம் வரங்களை வேண்டித் தியானித்த படி
உள்ளிழுத்த மூச்சுக்காற்று
நுரையீரலை முட்டி மோதி
அதே வேகத்தோடு 'க்கும்” இருமலுடன் வெளியேறும்.
தியானம் கலைந்தது.
அவன் வேண்டிய வரம் யாதோ?
யானறியேன்...!
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.