தோழமை பெரிது!
மாறாதே ஒற்றுமை தோழா... வானில்
மாற்றமும் வந்தாலும் நட்புதான் தாழா
ஈறாக காவலும் உண்டே... என்று
இன்னலில் தோள்சேரும் நண்பன்கற் கண்டே!
ஏட்டினில் பெற்றிடும் வீழா… கல்வி
எட்டிட ஆர்வத்தில் ஏற்றிடும் தோழா
நாட்டினில் ஏற்படும் சூது... வாது
நம்மன்பை வீழ்த்திட வேவராத் தோது!
பார்வைக்கு நல்லன்பு காட்டும்… நல்
பண்பினால் மாணிக்க மாண்பினைக் கூட்டும்
ஆர்வத்தை எல்லோர்க்கு மூட்டும்... ஓர்
ஆளுமை நட்பினில் மேன்மையாய்க் காட்டும்
உத்தமத் தாலாட்டாய்க் கிட்டும்... நட்பு
உண்மையின் ஆழத்தை உள்ளத்தில் கட்டும்
மொத்தத்தில் தோழமை காட்டி... வாழ்வோம்
மோதாமல் பாரினில் ஒற்றுமை கூட்டி!
(சிந்துப்பா..ஆனந்தக்களிப்பு)
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.