இளைஞர் திறன் ஊக்க ஆத்திசூடி
* அன்பினைப் பரிமாறு கல்வியில் கருத்தூன்று
* ஆக்கத்தில் நாட்டம் கொள் காட்சிக்கு எளியனாயிரு; சட்ட நுணுக்கம் அறி
* இளமையில் திறன்வளர் தகைமை போற்று; தலைமை ஏற்றிடு; தியானத்தில் திளைத்திடு
* ஈடுபாட்டை இயல்பாக்கு நன்மையில் நாட்டம் கொள்
* உலகப் போக்கு உணர் பண்பட்ட செயல்புரி
* ஊக்கமே உயர்வு பாடறிந்து பழகு
* எத்திக்கும் உனதே பதற்றம் தவிர்
* ஏக்கம் தவிர்த்திடு பிரிவினை போற்றாதே
* ஐயம் அகற்று மதுவினை ஒதுக்கிடு
* ஒற்றுமையின் வலிமை உணர் மாற்றுக் கருத்தையும் மதித்திடு
* ஓடிப் பயிற்சி செய் மாற்றூண் விரும்பாதே
* ஔவை அறம் கடைப்பிடி முடிவெடுக்கத் தயங்காதே
- குழந்தைசாமித் தூரன், புதுவை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.