கலகக் குரல்
என் விரல் ஒன்று
இங்கே துடித்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் எண்ணுவது சரியா என்று
எனக்குத் தெரியவில்லை?
நரம்புகள் அந்த விரலை
'போ” என்று முடுக்கிக் கொண்டிருக்கிறது.
வெளியில் கடும் ஒளிவெள்ளம் பொழிந்தும்
என் விரல் ஒன்று
துடித்துக் கொண்டிருக்கிறது.
அந்தரத்தில் ‘விசிறி’ சுழன்று விசிறிக் கொண்டிருக்க
என் ஒடுங்கிய குழிந்த கன்னங்கள் நடுங்க
என் விரல் ஒன்று
கையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு
ஓடிப்போய் நிறுத்தி விடலாமென்று.
மற்ற விரல்கள் அனைத்தும்
ஒன்று சேர்ந்து எதிர்த்தன.
‘தனித்து நின்றால்...’
கலகக் குரல் ஒடுங்கிப் போய்
மீண்டும் என் கையின் ஆளுகையில்
மிதிபட அதற்குத் தலைவிதி...
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.