வருக... வருக ...
வருக புத்தாண்டே
...
உன்னை
வரவேற்பதில் எமக்கு
அவ்வளவாய் உடன்பாடில்லை.
வருடந்தோறும்
வருகிறாய்...
வந்து போனதற்குச் சில
தடயங்கள் விட்டுவிட்டு
வரலாறாய் ஆகின்றாய்,
சிலநேரம்
சாபக்கேடாய்ப்
போகின்றாய்...!
இது வாடிக்கையாயிற்று;
இந்த
வழக்கத்தை ஒழித்து
இன்று புதிதாயப் பிறந்தோம்
என்றனன் மகாகவி பாரதி!
எனவே,
ஒவ்வொரு நாளும்
புத்தாண்டே என்ற
உணர்வே பெருகும்,
அதனால்... அதனால்...
ஆண்டொன்று போனால்
வயதைக் கூட்டிவிட்டு
ஆயுளைக் குறைக்கிறாய்;
அனுபவங் கூட்டுகிறாய்!
அதனால் உன்னை
வாழ்த்திப்பாடுகிறேன்,
வருக... வருக... புத்தாண்டே ...
வாழ்வெல்லாம் தருக... தருகவே!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.