அந்த ஒரு நொடி!
எனக்கு எப்போதும்
அந்த ஒரு நொடி போதும்...!
எனக்கான என்னுடைய
என்னிலிருந்து 'நான்” விடுபடுகிற
தனிமையின் மடியில் துயில்வதற்கான
அந்த ஒரு நொடி போதும்...!
உனக்கும் எனக்கும் இடையேயான
இடைவெளி
எனக்கும் என்புறத்திற்கும் இடையேயான
இடைவெளி
இவைகள் எதுவும் எனக்கு வேண்டியதில்லை
ஒரு சிரிப்பு
என்னுள் பாயவிருக்கும்
அந்த ஒரு சிரிப்பு போதும்...!
அந்த ஒரு சிரிப்பு
பற்றி எரிந்து கொண்டிருக்கும்
எனக்கான மயானக்காட்டில்
இருக்குமென தேடியலையக் கூடும்
ஒரு கூடு.
- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.