உயிர்த்திசை
உயிர்த்திசையறியாத
உயிருமுண்டோ...!
கருவறை தாங்கிய காலமுதல்
அனுபவித்த வலிகளும் வேதனைகளும் மீறி
ஆனந்தம் அடைந்த அதிசயமே..!
கையேந்தி இடுப்பில் சுமந்த கண்ணே...!
அது சொர்க்கம் என்றறியாப் பருவம்,
அறிந்துகொண்ட போது
கைமீறிப் போன கனவு அது!
வேரின்றி விருட்சம் ஏது?
நிலவின்றி வானம் இருக்கலாம்,
நீயின்றி என் திசைகள் வளர்ந்ததில்லை.
கவலைகள் கொன்றழிக்கும் காலம் தான்
கரம் நீட்டிக் காக்கும் திசை காட்டி!
ஒவ்வொருகணமும் மகவிற்காக
உயிர்த்தெழும் உயிரே... உன்னதமே...!
திசையறியாப் பறவையாய்
திக்குத் தெரியாத காட்டில் இருக்கிறேன்,
உயிர்த்து இசையெழுப்பி உயிர்த்திசை காட்டு!
என் முதலும் கடைசியுமான முழுமுதல் தெய்வமே!
- "இளவல்" ஹரிஹரன், மதுரை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.