தடையாவது ஏன்?
தந்தை மகளுக்காக
விரல் பிடித்து நடைபயிலத் தந்தான்
விரும்பியதை எல்லாம்
பாசமாகப் பரிசளித்தான்
மகள் வளர வளர
அவள் ஆசைகளும் வளர்ந்தன
பஞ்சு மிட்டாய்
குச்சி மிட்டாய்
பட்டாடை தாவணி
தங்கக் கொலுசு, வைர வளையல்
பள்ளிப்படிப்பு தொடங்கிப்
பட்டபடிப்பு வரை
சின்ன சின்ன ஆசைகளை
அள்ளித் தந்த தந்தை
ஏனோ மகளின்
பருவ வயதில்
மலரும் அன்புக்
காதலுக்கு மட்டும்
'தடையாகிறானே'... ஏன்?
என்று கேட்கலாம்!
காதல் எனும் போர்வையில்
காமப்புலிகள் ஏமாற்றித்
தன் மகளை அழித்து
இரையாக்கி விடக்கூடாதே...!
என்கிற எச்சரிக்கையாகத்தான்.
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.