சிறுதுளிக் கவிதைகள்
பாறை மனம்
அதில் வந்து அமர்கிறது
ஆரவாரமின்றி ஆசை
*****
இருள் வெளியைக் கடக்கிறேன்
ஞானம் வருகிறது
மின்மினியின் வெளிச்சத்தில்
*****
நீர்க் குமிழி
உடைந்து உணர்த்தியது
பிரபஞ்ச ரகசியம்
*****
நிலவுடனும் நிமிர்ந்த மரத்துடனும்
பேசி முடித்த பிறகு
நிம்மதியாக தூங்கிப்போனேன்
*****
மழை நாள்
நனைந்து விட்டுச்செல்லும்
நினைவுகள்
*****
தூறல் தொடங்கி
சாரலாக மாறுவதற்கு முன் கிடைத்தது
மழைக்கவிதை
*****
காக்கை குருவிகள்
பறந்து செல்லும் வானம்
அருகில் தான் இருக்கிறது
*****
மெய்மறந்து நனைந்து
கேட்டுக் கொண்டே வந்தேன்
மழைப் பேச்சு
*****
யாருமற்ற மரத்தடி
என்னோடு பேசும்
இலைகள்
*****
பட்டினி மறந்த
பரவச நிலை...
மழை இரசித்த தருணங்கள்
*****
போதி மரம் எதற்கு
மழையைப் பருகு வரும்
ஞானம்
- மாமதயானை, விழுப்புரம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.