மே முதல் நாள்
முத்தாய் வியர்வை துளிர்க்க
முதலாளியின் சுடுசொல்
முள்ளாய்க் குத்த
ஒட்டிய வயிறு
வீராப்புத் தகர்க்க
விதியை நொந்தே
வீணாக்கிய காலங்கள்
விபரம் புரியாமல்
விரைந்தே செல்கிறது
எத்தனை மணிநேரம்
இத்தனை மனிதர்கள்
கூலித்தொழிலாளியாக
கூக்குரலிட்டு
குரல் கொடுத்தாலும்
வருடத்திலொரு நாள்
வண்ண நிறத்தில்
தொழிலாளர் நாமென
கைகோர்க்கும் பூமியிது
வர்க்கமும் பேதமும்
வல்லரசுகளாக
வாழும் நாட்டில்
வஞ்சனை புரிய
எட்டுமணி நேரத்தில்
ஏசியிலொருவன்
எத்தனை மணி நேரம்
இத்தனை வெயிலில்
இழுத்துப் பறித்து
வேலை செய்தாலும்
எடுத்துக் கொடுத்த பணம்
எட்டுசான் வயிற்றுக்கு பத்தல்ல
இன்னொருவன்
எத்தனை நாள்
இத்தனை வேதனை
இந்த ஏழைத் தொழிலாளிக்கு
ஏக்கப் பெருமூச்சும்
ஏழையவன் பூமியை
பாறையாகப் பிளந்து
பயமுறுத்துகிறது
பாவிகளாகிய ஏழைகளைக்
காவுகொள்ளக் காத்திருக்கிறது
.!
- வாணமதி, சுவிற்சர்லாந்து.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.