முதுமை நோயல்ல...!
மாண்புடையது; மதிக்கத்தக்கது முதுமை.:
வாழ்க்கையின் வளர்ச்சிப் படிநிலையில்:
முதுமை நோயல்ல முதிர்வின் முழுமை;:
பின்னோர்க்காக அயராது அரும்பாடுபட்டு:
ஆடி அடங்கிய அற்புத வாழ்க்கை!:
சிறந்தது பயிற்றும் சீரிய பருவம்;:
முதுமை அரிய அனுபவத்திரட்சி;:
தலைமுறை கண்ட தகைமை;:
பண்பாட்டுக் காவல் நிலையம்;:
கலைகளின் கதைகளின் ஊற்றுக்கண்;:
மனிதத்தின் மகத்துவப் பருவம்;:
உடலாலும் மனத்தாலும் நலிந்தாலும்:
உறவாலும் உணர்வாலும் செழுமையே.:
முதியோர் அறிவுரை முயன்று பெற்றே:
முதுமை போற்றி முழுமை அடைவோம்!
- குழந்தைசாமித் தூரன், புதுச்சேரி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.